யன்தாராவை தரக்குறைவாக பேசிய பிறகு திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார் நடிகர் ராதாரவி. அதன் பிறகு அதிமுகவில் சேர்ந்த அவர் 6 மாதங்களில் அங்கிருந்து கிளம்பிச் சென்று பாஜகவில் சேர்ந்துள்ளார். அவர் பாஜகவில் சேர்ந்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகின.
இந்த ராதாரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் பெண்களை கேவலப்படுத்தியுள்ளார். அவர் டப்பிங் யூனியன் தலைவராக உள்ளார். யாராவது அவரை கேள்வி கேட்டாலோ அல்லது திரையுலகில் உள்ளவர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்தாலோ அவர்களுக்கு தடை விதித்துவிடுகிறார்கள்.
ராதாரவி விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை மென்ஷன் செய்து ட்வீட்டியுள்ளார் சின்மயி. ஸ்மிருதி மேடம். மிஸ்டர் ராதாரவி உங்கள் கட்சியில் சேர்ந்துள்ளார். அவர் பல நிகழ்ச்சிகள், மேடைகளில் பெண்களை அசிங்கப்படுத்தியுள்ளார்.