இந்த தாக்குதலில் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. அமெரிக்க படைகள் ஈரானை விட்டு இப்போதும் வெளியேறாமல் இருக்கும் இந்த சூழலில், ஈராக்கில் உள்ள அனைத்து தூதரகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப்போது நடத்தப்பட்ட இந்த ராக்கெட் தாக்குதலுக்கும் முந்தைய தாக்குதலுக்கு 24 மணி நேர இடைவெளி உள்ளது. இந்த தாக்குதல் குறித்து ஈரானியர்கள் கூறுகையில், “அமெரிக்க ராணுவ படையினருக்கு: நாங்கள் எடுத்திருக்கும் இந்த பதிலடியை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களில் இறுதி நபர் உயிரோடு இருக்கும் வரை இந்த தாக்குதல் தொடரும்” எனக் கூறப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் உற்பத்தியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நோக்கத்தில் பல ஆண்டுகளாக ஈரானுக்கு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து வந்த அமெரிக்கா, போர் வேண்டும் என்ற நோக்கத்தோடு காசிம் சுலைமானியை கொன்றுள்ளது எனச் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அமெரிக்காவின் இந்த செயலுக்கு ஈரான் கடும் கண்டனத்தைத் தெரிவித்த ஈரான், காசிம் படுகொலைக்கான உரியப் பதிலை அமெரிக்கா விரைவில் பெறும் என்றும் எச்சரித்திருந்தது. இந்த எச்சரிக்கை, சுலைமானியின் இறுதி ஊர்வலம் நிறைவடைந்த சில மணி நேரத்தில் செயலாக வெளிப்பட்டது.